உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வன்னியர் நலவாரிய உறுப்பினராக விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., நியமனம்

வன்னியர் நலவாரிய உறுப்பினராக விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., நியமனம்

விக்கிரவாண்டி; வன்னியர் நலவாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.தமிழக அரசு வன்னியர்கள் நல வாரியத்தின் உறுப்பினராக விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவாவை நியமனம் செய்துள்ளது.இதையொட்டி நேற்று காலை அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.,வனத்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்.எல்.ஏ., லட்சுமணன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, விஸ்வநாதன், மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ