உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலி நம்பர் பிளேட்டுடன் ஓடிய லாரி பறிமுதல் விக்கிரவாண்டி போலீஸ் விசாரணை

போலி நம்பர் பிளேட்டுடன் ஓடிய லாரி பறிமுதல் விக்கிரவாண்டி போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே போலி நம்பர் பிளேட்டில் ஓடிய டாராஸ் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர். வானுார் அருகில் உள்ள எடப்பாளையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சவுக்கு மரம் லோடு ஏற்றி வந்த டி.என்.52.ஏ.7355 எண்ணுடைய டாராஸ் லாரி விக்கிரவாண்டி அடுத்த சித்தணி ரோடு, பைபாஸில் நின்று கொண்டிருந்தது.லாரி நீண்ட நேரம் நிற்பதால், நெடுஞ்சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகப்பட்டு லாரியில் இருந்து உரிமையாளர் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, அவரது லாரி வேலுாரில் ஓடிக்கொண்டு இருப்பதாக தகவல் கூறினார்.லாரி உரிமையாளரை நேரில் வரவழைத்து விசாரித்தபோது, விழுப்புரம் பிடாகம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமன் என்பதும், தனது மனைவி சுதா ,35; பெயரில் லாரி உள்ளதாகவும், லாரி வேலுாரில் சரக்கு ஏற்றி சென்றுள்ளது என தெரிவித்தார்.சவுக்கு லோடுடன் நின்றிருந்த டாரஸ் லாரி, போலி நம்பர் பிளேட் பொருத்தி இயக்கி வருவது தெரியவந்தது. தொடர் விசாரணையில், போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட லாரி, திருவெண்ணைநல்லுார் அருகில் உள்ள கரடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன், 40; என்பவருக்கு சொந்தமானது என்பதும், லாரியை பேரங்கியூரை சேர்ந்த டிரைவர் சத்தியசீலன், 35; ஓட்டியது தெரியவந்தது.விக்கிரவாண்டி போலீசில் உண்மையான லாரியின் உரிமையாளர் ஸ்ரீராமன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, போலி நம்பர் பிளேட்டுடன் ஓடிய லாரியை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர் டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை