வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Ok your colleage devlape by you veary Good Thankyou
ஓகே வெரி குட். யுவர் காலேஜ் டெவலப் செய்ய வாழ்த்துக்கள்
இந்திய அளவில் 52,081 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகிறது இக்கல்லுாரிகளில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் கல்லுாரியின் தரம் குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் தேசிய தர நிர்ணய குழு மூலம் வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு விழுப்புரம் அண்ணா அரசு கலை கல்லுாரி 201-300 தர வரம்பிற்குள் சென்று சாதனை படைத்தது. இந்தாண்டு தேசிய தர நிர்ணய குழுவின் தர வரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிட்டது.இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி, தேசிய அளவில் 154 வது இடம் பிடித்து புதிய சாதனையை படைத்து, தமிழகத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளது. இந்த பட்டியலில் வேலுார் மண்டலத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசு கல்லுாரிகளில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி முதலிடம் பிடித்துள்ளது. விழுப்புரம் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரை தகர்த்தெறியும் வகையில், மாணவர்களை தயார் செய்து, மண்டல அளவில் அரசு கலை கல்லுாரிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் பட்டதாரி மாணவர்கள் அதிகமாக பயிலும் வாய்ப்பை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் வாழ்வை உயர்த்தி சிறப்பிடம் பிடித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளில் தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஒரே கல்லுாரி என்ற சாதனையையும் அண்ணா கல்லுாரி படைத்துள்ளது. இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த தேசிய தர நிர்ணய குழு ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் உட்பட பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் பாராட்டு தெரிவித்தார். மேலும், மாவட்ட கலெக்டர், வேலுார் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர், கல்வி ஆணையர், உயர்கல்வி துறை செயலர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி., பெற்றோர்கள், முன்னாள் மாணவர்களுக்கும் கல்லுாரி முதல்வர் நன்றி தெரிவித்தார்.
Ok your colleage devlape by you veary Good Thankyou
ஓகே வெரி குட். யுவர் காலேஜ் டெவலப் செய்ய வாழ்த்துக்கள்