வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி விழுப்புரம் கலெக்டர் ஆய்வு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி முகாமை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருக்கோவிலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்லரிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடந்தது. அங்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் செயலில் உள்ளீடு செய்யும் பணியினை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் நேற்று நேரில் பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். திருக்கோவிலுார் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், திருவெண்ணெய்நல்லுார் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ரகுராம் உட்பட பலர் உடனிருந்தனர்.