மேலும் செய்திகள்
மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம்
16-May-2025
செஞ்சி : கீழ்மாம்பட்டு அம்மச் சாரம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கோவிலில், 26ம் ஆண்டு பிரம்மோற்சவம், கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், வழக்கறிஞர் விஜய் மகேஷ், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று 23ம் தேதி மாலை திருவிளக்கு பூஜையும், 24ம் தேதி பூ பல்லக்கும், 25ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
16-May-2025