உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

விழுப்புரம் : அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனமும் சாற்று முறையும் நடந்தது. இதைத்தொடர்ந்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ பெருந்தேவி தாயார் உடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, மாலையில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் 'கோவிந்தா' கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !