துணை முதல்வருக்கு வரவேற்பு தெற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு
விழுப்புரம்: விழுப்புரம் வருகை தரும் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பளிக்க, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (5ம் தேதி) வருகை தரும் துணை முதல்வர், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி, மாலை 4:00 மணிக்கு திருவெண்ணெய்நல்லூரில் தி.மு.க., தலைவர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். 6ம் தேதி காலை 9:30 மணிக்கு விழுப்புரத்தில் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நுலகத்தை திறக்கிறார்.விழுப்புரம் வருகை தரும் துணை முதல்வருக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 5ம் தேதி மாலை 3:00 மணிக்கு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரில், துணை பொதுச் செயலாளர் அமைச்சர் பொன்முடி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதி எம்.எல். ஏ.,க்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியினர் திரளாக பங்கேற்க வேண்டும்.