உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நலவாரிய உறுப்பினர் ஆய்வு

தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நலவாரிய உறுப்பினர் ஆய்வு

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட நலவாரிய உறுப்பினர் சிவா, தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், தமிழக உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய உறுப்பினர் சிவா, நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.அலுவலகத்தில் உள்ள கட்டமைப்பு, தொழிலாளர்களுக்கான பதிவு வசதிகள் குறித்து ஆய்வு செய்த அவர், அங்கிருந்த தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு அரசின் புதிய திட்டங்களை தொழிலாளர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்கள் பயன்பெறச் செய்ய வேண்டும்.சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். தொழிலாளர்களின் பதிவுகள் புதுப்பித்தல் மற்றும் அவர்களது கோரிக்கை விண்ணப்பங்களை சரி பார்த்து, உடனடியாக ஒப்புதல் அளித்து செயல்படுத்தி, அதிகளவில் உறுப்பினர்களை நலவாரியங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.அமைப்பு சாரா நலவாரியத்தைச் சேர்ந்த 60 வயது முடிந்த தொழிலாளர்களுக்கு, அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதிய ஒப்படைப்புக்கான ஆணை வழங்கப்பட்டது.தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் மற்றும் அலுவலர்கள், தொழிற் சங்கத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ