உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்துறையில் வேலை செய்வதாக கூறி ஏமாற்றிய கணவர் மீது மனைவி புகார்

மின்துறையில் வேலை செய்வதாக கூறி ஏமாற்றிய கணவர் மீது மனைவி புகார்

விழுப்புரம்; விழுப்புரம் அருகே மின்துறையில் வேலை செய்வதாக கூறி, ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக, கணவர் மீது மனைவி அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் வண்டிமேடு தட்சண்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் மகன் ஹரிதாஸ்,30; இவரது மனைவி குணவதி,26; இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஹரிதாஸ் தான், மின் வாரியத்தில் வேலை செய்வதாக பொய் சொல்லி, குணவதியை திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. சொந்த ஊரான எழாய் கிராமத்திலிருந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் வந்து வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹரிதாஸ் தினமும் மது குடித்துவிட்டு வந்ததை தட்டிக்கேட்ட குணவதியை மிரட்டியுள்ளார். இது குறித்து குணவதி அளித்த புகாரின் பேரில், ஹரிதாஸ் மீது, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை