உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கணவருடன் பைக்கில் சென்ற மனைவி பலி 

கணவருடன் பைக்கில் சென்ற மனைவி பலி 

திண்டிவனம்: திண்டிவனத்தில் கணவருடன் பைக்கில் சென்ற மனைவி கீழே விழுந்து இறந்தார். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடியைச் சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேசன், 34; இவரது மனைவி ஐஸ்வர்யா, 34; இருவரும் நேற்று முன்தினம் மாலை சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பாலம் அருகே மாலை 6:30 மணியளிவல் வந்த போது, பைக்கிற்கு முன்னால் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் திடீரென்று பிரேக் போட்டுள்ளார். அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரசன்ன வெங்கடேசன், பைக்கை சடன் பிரேக் போட்டபோது, கணவன், மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஐஸ்வர்யா இறந்தார். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !