மேலும் செய்திகள்
வேளாண் மாணவிகள் செயல் விளக்க நிகழ்ச்சி
12-Dec-2024
வானுார் : காரைக்கால் பஜன்கோ வேளாண் கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவிகள் ஏற்பாடு செய்த காட்டுப்பன்றி கட்டுப்பாடு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வானுார் கிராமத்தில் நடந்தது.காரைக்கால் பஜன்கோ வேளாண் கல்லூரியில் இருந்து நான்காம் ஆண்டு மாணவிகள், வானூர் வட்டாரத்தில் பல்வேறு வேளாண்மை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வானுார் கிராமத்தில், ஊரக வேளாண்மை பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் முட்டை அமில கரிசல், காட்டுப்பன்றி கட்டுப்பாடு முறைகள், சுய உதவிக்குழு குறித்த விழிப்புணர்வு, பசுமை குடிலின் பயன்பாடு குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் புஷ்பராஜூ, முனைவர் பார்த்தசாரதி, சங்கர் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், வானுார் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
12-Dec-2024