உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேற்கூரையின்றி வாகனம் நிறுத்துமிடம் ரயில்வே துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேற்கூரையின்றி வாகனம் நிறுத்துமிடம் ரயில்வே துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?

விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில், நிறுத்தப்படும் வாகன பாதுகாப்பகத்தில் மேற்கூரை அமைப்பதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், தினமும் 500க்கும் மேற்பட்ட பைக்குகள் நிறுத்தப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் தனியார் மற்றும் அரசு பணிக்கு சென்று வருகின்றனர். இதேபோல் கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ரயிலில் சென்னைக்கு சென்று வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர், விழுப்புரம் ரயில் நிலையத்தில் உள்ள வாகன பாதுகாப்பகத்தில், காலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு, மாலையில் எடுத்துச் செல்கின்றனர். ரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்ற வாகன கட்டண அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பஸ் நிலையங்களில் வாகன நிறுத்த கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது போன்ற பிரச்னை இங்கு கிடையாது.

கட்டண விபரம்

இரு சக்கர வாகன பாதுகாப்புக்கு ஒரு நாளைக்க 20 ரூபாய், அடுத்த ஒவ்வொரு நாட்களுக்கும் 30 ரூபாய். ஒரு மாத வாடகையாக 400 ரூபாய் வசூலிக்கப்படும். சைக்கிளுக்கு ஒரு நாளைக்கு 10 ரூபாய், மாத வாடகையாக 250 ரூபாய் வசூலிக்கப்படும்.ஆட்டோ மற்று கார் ஆகியவற்றுக்கு ஒரு நாளைக்கு 80 ரூபாய். அடுத்த ஒவ்வொரு நாட்களுக்கும் 160 ரூபாய். பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய்., அடுத்த ஒவ்வொரு நாட்களுக்கும் 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இங்கு, 500க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனம் நிறுத்தப்படும் நிலையில், மேற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால், மழை, வெயில் காலத்தில் வாகனங்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிறது. இதே நிலை தொடர்ந்தால், வாகனங்களின் ஒரிஜினல் நிறம் மாறக்கூடிய அபாயம் உள்ளது.வாகனங்கள் நிறம் மாறுவதுடன், பழுதடையவும் வாய்ப்புள்ளது. இதே நிலையில் தான், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள், திறந்த வெளியில் நிறுத்தப்படும் நிலை உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன பாதுகாப்பகத்தில், மேற்கூரை அமைத்திட வேண்டும் என வாகனங்களை நிறுத்துவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை