உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மார்க்கெட் கமிட்டி மின்னணு எடை மேடை பயன்பாட்டிற்கு வருமா?

மார்க்கெட் கமிட்டி மின்னணு எடை மேடை பயன்பாட்டிற்கு வருமா?

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் மின்னணு எடை மேடை சீரமைத்தும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவலுார்பேட்டை, மார்க்கெட் கமிட்டியில் சுற்றுப்பகுதியில் உள்ள, 100 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நெல், மணிலா உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை விற்பதற்கு லாரி, டிராக்டர், வேன் உள்ளிட்ட வாகனங்களில் தினசரி கொண்டு வருகின்றனர். கமிட்டியில் பெரிய அளவில் விளை பொருட்களை இருப்பு வைக்கும் குடோன்கள் வசதிகளும் உள்ளன. இந்த கமிட்டியில் வியாபாரிகள் நலன் கருதி கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்னர் 60 டன் , மின்னணு எடை மேடை வசதி ஏற்படுத்தப்பட்டது. வாகனங்கள் எடை போடுவதற்காக கட்டணம் வசூலிக்கும் உரிமைக்காக ஏலமும் விடப்பட்டு நல்ல முறையில் இயங்கியது. இந்நிலையில் இந்த எடை மேடை பழுதாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீரமைக்கபட்டும் அப்படியே காட்சிப்பொருளாக காணப்படுகிறது. இதனால் விளை பொருட்களுடன் எடை போட வரும் வாகனங்கள் 2 கி.மீ., துாரம் சென்று தனியார் எடை மேடையில் எடை பார்த்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. வசதிகள் நிறைந்துள்ள இந்த கமிட்டியில் எடை மேடைக்கு கட்டணம் வசூலிக்கும் ஏலத்தை விட்டு எடை மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி