குழந்தைகளுடன் பெண் மாயம்: போலீசில் புகார்
செஞ்சி; இரண்டு குழந்தைகளுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். செஞ்சி அடுத்த புலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாஸ், 60; இவரது மகள் கவுசல்யா, 30; கவுசல்யாவுக்கும் திண்டுக்கல் மாவட்டம் கட்டகூத்தப்பட்டியை சேர்ந்த சரவணன் 34, என்பவருக்கும் கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு புகழினி 5, தர்சன் 2 என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சரவணன் போர்வெல் லாரியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டாக சரவணன், அசாம் மாநிலத்தில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், கவுசல்யா குழந்தைகளுடன் புலிப்பட்டில் உள்ள தந்தை தாஸ் வீட்டில் தங்கி இ ருந்தார். சரவணன் அவ்வப்போது புலிப்பட்டு கிராமத்திற்கு வந்து சென்றார். இந்த நிலையில், கடந்த 8ம் தேதி கட்டகூத்தப்பட்டியில் உள்ள கணவரின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு கவுசல்யா குழந்தைகளுடன் வீட்டில் இருந்து சென்றார். ஆனால் கவுசல்யாவும், குழந்தைகளும் அங்கு செல்லவில்லை. உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே மகளையும், குழந்தைகளையும் கண்டு பிடித்து தருமாறு தாஸ், நல்லான் பிள்ளை பெற்றாள் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.