மேலும் செய்திகள்
கிடைக்கும் தீர்வு; மனுக்களுடன் மக்கள் நம்பிக்கை
29-Apr-2025
விழுப்புரம்; வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். வானுார் தாலுகா ஒட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ராணி, 42; நேற்று முன்தினம் காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் தர்ணாவில் ஈடுபட்டார்.போலீசார் அவரை சமாதானப்படுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். ராணி அளித்த மனுவில்; இந்து நாவிதர் வகுப்பை சேர்ந்த நாங்கள், வானுார் ஒட்டை கிராமத்தில் வசித்து வருகிறோம். கிராமத்தில் கடந்த 6ம் தேதி நடந்த கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தில் சிலர் தகராறு செய்து, எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவோம் என கூறி மிரட்டி தகராறு செய்து வருகின்றனர். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு இலவச மனை பட்டா வழங்க நீண்ட காலமாக கோரி வருகிறோம். இது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
29-Apr-2025