உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கீழே விழுந்து தொழிலாளி சாவு

கீழே விழுந்து தொழிலாளி சாவு

திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அருகே தரை பாலத்திலிருந்து குடிபோதையில் கீழே விழுந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.அத்திப்பாக்கம் கி ராமத்தை சேர்ந்தவர் சண்முகம், 45; கூலித் தொழிலாளி. இவர், கடந்த மாதம் 27ம் தேதி இரவு 10 :00 மணியளவில் கிளியூர்- நத்தாமூர் சாலையில் உள்ள சிமென்ட் தரைப்பாலத்தின் மீது குடிபோதையில் அமர்ந்திருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை