உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி  தொழிலாளி உயிரிழப்பு 

வாகனம் மோதி  தொழிலாளி உயிரிழப்பு 

கோட்டக்குப்பம் : கீழ்புத்துப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம், 57; கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 4;15 மணிக்கு, இ.சி.ஆர்., சாலையில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். தனியார் ஆயுர்வே மருந்து கடை அருகே புதுச்சேரி மார்க்கமாக நடந்து சென்றபோது, சென்னையில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம், ராமலிங்கம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு காலாப் பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். கோட்டக் குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து போலீசார் விசாரித்த வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை