உள்ளூர் செய்திகள்

 தொழிலாளி தற்கொலை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 48; எடைமேடையில் பணிபுரியும் தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை எடைமேடையில் உள்ள அலுவலகத்தில் மின்விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ