உலக சுற்றுச்சூழல் தினம் மரக்கன்று நடும் விழா
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.பேரூராட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார் துணை சேர்மன் பாலாஜி, செயல் அலுவலர் ஷேக் லத்தீப் முன்னிலை வகித்தார்.இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார்.ேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் சுற்றுச்சூழல் தின உறுதி மொழி எடுத்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.மேற்பார்வையாளர் ராமலிங்கம், பதிவறை எழுத்தர் சேகர், கணினி ஆப்ரேட்டர் கீதா உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.