உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிலம்பத்தில் உலக சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

சிலம்பத்தில் உலக சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

விழுப்புரம் : உலக சாதனைக்கான சிலம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற விழுப்புரம் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திருச்சி முதலியார் சரித்திரம் ரயில்வே மைதானத்தில் கடந்த ஜனவரி 12ம் தேதி சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில், 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.வேலுதேவர் அறக்கட்டளை, இந்திய சிலம்பம் சம்மோனியம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட் நீதிபதி முரளிசங்கர், இந்திய சிலம்பம் சம்மோனியம் தலைவர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.இதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை மாணவர்கள் 100 பேர் பங்கேற்று இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். இவர்களுக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் தலைவர் கந்தன், செயலாளர் அன்பரசி, டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை பயிற்சியாளர் அன்பரசி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ