செஞ்சியில் உலக யோகா தின நிகழ்ச்சி
செஞ்சி : செஞ்சி சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி நடந்தது.தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சேகர் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி யோகாசனம் குறித்து விளக்கி பேசினார். செஞ்சி மனவளக்கலை மன்ற பேராசிரியர் பாலு, உதவி பேராசிரியர் சங்கர் ஆகியோர் மாணவர்களுக்கு யோக பயிற்சி அளித்தனர்.யோகாவில் பங்கேற்ற மாணவர்கள், உலக நாடுகளில் நடந்து வரும் போரை நிறுத்த வலியுறுத்தி 'வேண்டாம் போர், வேண்டும் அமைதி'என்ற வாசக வரிசையில் நின்றனர். பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை சப்ரூன் தொகுத்து வழங்கினார். ஆசிரியை யாஸ்மின் நன்றி கூறினார். சங்கமம் கல்லுாரி
செஞ்சி அடுத்த அன்னமங்கலம் சங்கமம் கலை அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி சேர்மன் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் வழக்கறிஞர் பரமசிவம் முன்னிலை வகித்தார். முதல்வர் ஹரிகுமார் வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் அந்தோணி ரீகன் தலைமையில் மாணவர்கள் யோகா நிகழ்ச்சி நடத்தினர். இதில் பேராசிரியர்கள், துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்.