மஞ்சள் பை விழிப்புணர்வு
விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு, மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சள் பையுடன் கூடிய மரக்கன்றுகளை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.