மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது
29-Oct-2025
மரக்காணம்: புதுச்சேரியில் இருந்து பைக்கில் மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மரக்காணம் அடுத்த அசப்பூர் காளியம்மன் கோவில் அருகே சப் இன்ஸ் பெக்டர் கிருஷ்ணன் வாகன சோதனையில் ஈடு பட்டார். அப்போது, புதுச்சேரியில் இருந்து பைக்கில் 40 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த நாகல்பாக்கத்தை சேர்ந்த அருள்தாஸ், 38; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
29-Oct-2025