உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் விழுந்து வாலிபர் இறப்பு: போலீசில் புகார்

கிணற்றில் விழுந்து வாலிபர் இறப்பு: போலீசில் புகார்

திண்டிவனம்: வாலிபர் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர், பிள்ளையார்கோவில் தெருவில் வசிப்பவர் ஆதிமூலம். இவரது மகன் புஷ்பராஜ்,23; இவர் கடந்த 14 ம் தேதி மாலை தன்னுடைய நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்பதால், வீட்டில் உள்ளவர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.கடைசியாக நிலத்திற்கு சென்று பார்த்த போது, அங்குள்ள கிணற்றின் மேல்பகுதியில் புஷ்பராஜ் அணந்திருந்த செருப்பு இருந்துள்ளது. இதை தொடர்ந்து திண்டிவனம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்து, தீயணைப்பு வீரர்களை வரவழைத்தனர். வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது, புஷ்பராஜ் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வாலிபரின் தாயார் மல்லிகா கொடுத்துள்ள புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை