உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / --ராம்கோ கல்லுாரி பட்டமளிப்பு விழா

--ராம்கோ கல்லுாரி பட்டமளிப்பு விழா

ராஜபாளையம், : ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் 7வது பட்டமளிப்பு விழா நடந்தது.முதல்வர் கணேசன் வரவேற்றார். ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராம ராஜா தலைமை வகித்து பேசுகையில், இக்கல்லுாரி 'நாக்' அங்கீகாரத்தின் 2வது சுழற்சியில் 'ஏ பிளஸ் கிரேடு', அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பான டி.எஸ்.ஐ.ஆர். அங்கீகாரம் பெற்றுள்ளது.மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவு, திறன்களை சமூக, நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும், என்றார்.சி.எஸ்.ஐ.ஆர். செயலர்கலைச்செல்வி பேசுகையில், பட்டம் பெறும் மாணவர்கள் உள்நாட்டு தொழில் நுட்பங்கள், நிலையான தீர்வுகளை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் தன்னம்பிக்கைக்கு பங்களிக்க வேண்டும்.உள்ளூர் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், என்றார். ராம்கோ கல்வி நிறுவன தலைவர்கள், தலைமை செயற்பாட்டு அதிகாரி கிரிதரன் நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ், பேராசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் ராஜ கருணாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை