உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சி கவுன்சிலர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு

நகராட்சி கவுன்சிலர்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் உள்ள 137 நகராட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு உள்ளாட்சித் துறை சட்ட திருத்தம், விதிகள் குறித்து மார்ச் 25 முதல் மே 16 வரை 2 நாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது.தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்களுக்கு உள்ளாட்சிகள் சட்ட திருத்தம் 2022, விதிகள் 2023 குறித்த பயிற்சி வகுப்பு, கோயம்புத்துார் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவன அதிகாரிகளின் மூலம் நடத்தப்பட உள்ளது. 25 மாநகராட்சிகளை சேர்ந்த 1487 கவுன்சிலர்களுக்கு மாமல்லபுரம், கொடைக்கானல், ஊட்டி, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் நேற்று முன் தினம் (மார்ச் 4) முதல் துவங்கியது. மார்ச் 21 வரை பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளது.137 நகராட்சிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 759 கவுன்சிலர்களுக்கு மார்ச் 25 முதல் மே 16 வரை 2 நாள் பயிற்சி வகுப்பு ஊட்டி, கன்னியாகுமரி, மாமல்லபுரம், ராமேஸ்வரம், கொடைக்கானல், திருச்சி, மதுரை, காஞ்சிபுரம் நகரங்களில் நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ