பஸ் ஸ்டாண்டில் வைப்பு அறையாக செயல்படும் பாலுாட்டும் அறை
ராஜபாளையம் : ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் செயல்படும் தாய்மார்கள் பாலுாட்டும் அறை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என தாய்மார்கள் எதிர்பார்த்துள்ளனர். மக்கள் கூடும் பஸ் ஸ்டாண்ட்களில் குழந்தைகளுக்கு பாலுாட்டும் தாய்மார்களுக்காக தமிழக அரசு இருக்கைகள் , மின்விளக்குகள் ,விசிறிகள் ,குடிநீர் உள்ளிட்டவசதிகளுடன் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பாலுாட்டும் அறை திறக்கப்பட்டது. பெற்றது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் திட்டம் முறையாக பராமரிப்பு இல்லை. ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே உள்ள பாலுாட்டும் அறைகள் வாகனம் நிறுத்தம் இடமாகவும் அதை ஒட்டிய கழிவறையானது தளவாட பொருட்கள் சேமிக்கும் பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது. பாலுாட்டும் தாய்மார்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளை தயக்கமின்றி சுகாதாரத்தோடு பாதுகாப்புடன் பயன்படுத்த நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.