உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை உத்சவம்

ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை உத்சவம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடை உத்சவம் நடந்தது.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று அன்னக்கொடை உத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை 11:00 மணிக்குமேல் வெள்ளிக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்க மன்னார் முன், தயிர் சாதம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக தயிர்சாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், பட்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ