மேலும் செய்திகள்
சிலம்பம் போட்டி; 'கதிரவன்' அசத்தல்
22-Aug-2024
சிவகாசி : சுவீடன் நாட்டில் நடந்த உலக முதியோர் தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கங்கள் பெற்ற சிவகாசியை சேர்ந்த ராஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடந்தது.சுவீடன் நாட்டில் உலக முதியோர் தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் இந்தியா சார்பில் சிவகாசியைச் சேர்ந்த 89 வயதான ராஜேந்திரன் பங்கேற்றார். அவர் 4 x 400 ரிலே போட்டியில் தங்கப்பதக்கமும், 2000 மீட்டர் ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 4 x 100 மீட்டர் ரிலே போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார். அவரை அசோகன் எம்.எல்.ஏ., சிவகாசி ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுப்புராஜ், தொழிலதிபர்கள் பாராட்டினர்.
22-Aug-2024