உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிருஷ்ணாபுரம் பராசக்தி நகரில் அவதி

கிருஷ்ணாபுரம் பராசக்தி நகரில் அவதி

ராஜபாளையம்: ராஜபாளையம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பராசக்தி நகரில் இரு தெருக்களில் அடிப்படை வசதியின்றி புறக்கணிக்கப்படுவதாக மக்கள் வேதனைஅடைந்துள்ளனர். ராஜபாளையம் முடங்கியார் ரோடு திருவள்ளுவர் நகர் எதிரே கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பராசக்தி நகர் உள்ளது. முதல் தெருவில் சாலை,வாறுகால் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மற்ற இரு தெருக்களிலும் செய்யவில்லை. மழை நீருடன்கழிவு நீர் கலந்து மக்களுக்கு அவதியை ஏற்படுத்தி வருகிறது. சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் சகதியாகி நடக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. ரேவதி: ஒவ்வொரு கிராம சபை கூட்டம் உள்ளிட்ட மக்கள் கூட்டங்களில் அடிப்படை வசதியான ரோடு, வடிகால் குறித்து கோரிக்கை வைக்கிறோம், முன்பு தெருவின் ஒரு பகுதியை மட்டும் ரோடு அமைத்து பாதியில் விட்டுள்ளனர். எங்கள் பகுதி பெயரை கூறி நிதி பெற்று அடுத்தடுத்த இடங்களில் புதிய ரோடு அமைக்கின்றனர். தேர்தல் காலத்தில் பணி ஒப்புதல் கடிதத்தை காட்டி சமாளிக்கின்றனர்.

பணிகள் தொடங்கப்படும்

நித்யா, கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர்: 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு பகுதி மட்டும் ரோடு அமைத்து பாதியில் விட்டுஉள்ளனர். ஏற்கனவே இப்பணிகளுக்கு ஒப்புதல்வழங்கப்பட்டு தேர்தலினால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு என்.ஆர்.ஜி.எஸ் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ