உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சட்ட உரிமைகள் விழிப்புணர்வு

சட்ட உரிமைகள் விழிப்புணர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் மகளிர் சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர் முகாம் நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இணை வேந்தர் அறிவழகி, துணைத்தலைவர் சசிஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். பல்கலை மகளிர் மேம்பாட்டு குழு தலைவர் கல்பனா வரவேற்றார்.மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் தீபா, மகளிருக்கான சட்ட உரிமைகள் குறித்து பேசினார். பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அகிலா, செல்வராணி, சங்கீதா செய்திருந்தனர்.பேராசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி