விழிப்புணர்வு கருத்தரங்கு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தாய்க்காக ஒரு மரம் என்ற விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.மரக்கன்றுகள் நடுதலை ஊக்குவிக்கும் பொருட்டு நடந்த இந்த நிகழ்ச்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் தலைமை வகித்தார். மரக்கன்று நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேளாண் அலுவலக வளாகம் முழுவதும்கொய்யா, மாமர கன்றுகள் நடப்பட்டன. கலந்து கொண்ட விவசாயிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.