உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜூலை 8 முதல் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள்

ஜூலை 8 முதல் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள்

விருதுநகர்:   கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி., எஸ்.எஸ்.சி.,  ஆர்.ஆர்.பி., ஆகிய தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு வைபை வசதியுடன் கூடிய கணினி ஆய்வகமும் உள்ளது.     அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான  புத்தகங்கள் அடங்கிய நுாலகம் உள்ளது.  ஆர்.ஆர்.பி.,ல் அறிவிக்கப்பட்ட   உதவி லோகோ பைலட் தேர்வுக்கான இலவச வகுப்பு ஜூலை 8 முதல் துவங்குகிறது.  இலவசப் பாடக்குறிப்புகள் வழங்கி பாடவாரியானத் தேர்வுகள், முழுமாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.    இவ்வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/rzTqHEiU8yigdCGp6 என்ற கூகுள் லிங்க் மூலமாக  அல்லது  gmail.comஎன்ற மெயில் மூலமாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவும் பதிவு செய்யலாம், என்றார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை