உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் கட்டட கழிவுகள்; அதிகாரிகள் நடவடிக்கை தேவை

நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டப்படும் கட்டட கழிவுகள்; அதிகாரிகள் நடவடிக்கை தேவை

விருதுநகர் : விருதுநகர் - சிவகாசி நெடுஞ்சாலையின் ஓரங்களில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதுதொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.விருதுநகர் - சிவகாசி ரோட்டில் ஏராளமான பட்டாசு விற்பனை கடைகள் உள்ளது. இந்த கடைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.இவை பெரும்பாலும் விளை நிலங்களுக்கு மத்தியில் கட்டப்பட்டு வருவதால் ஆங்காங்கே புதிய புதிய கடைகள் தொடர்ந்து நிறுவப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குமாரலிங்கபுரம், வீரசெல்லையாபுரம், வள்ளியூர், ஆமத்துார் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்துவருகிறது.இப்பகுதிகளில் பழைய வீடுகள், கடைகளை இடித்து விட்டு புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது கட்டடகழிவுகளை உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான பகுதிகளில் கொட்டுவது வழக்கம்.ஆனால் சிலர் இரவோடு இரவாக கட்டட கழிவுகளை லாரிகள், டிராக்டர்களில் கொண்டு வந்து நெடுஞ்சாலையின் ஓரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர்.இதனால் கட்டட கழிவுகள் ரோட்டில் பரவி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கு வழிவகை செய்கின்றன.மேலும் ரோட்டின் ஓரங்களில் கட்டட கழிவுகளை கொட்டுவதால் கண்மாய்களுக்கு நீர் செல்லும் நீர்வரத்து ஓடைகளில் தடை ஏற்படுகிறது.கட்டட கழிவுகளில் இருந்து வெளியேறும் துாசியால் வாகன ஓட்டிகளின் கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது.இது போன்று தொடர்ந்து நெடுஞ்சாலை ஓரங்களில் கட்டட கழிவுகளை கொட்டும் வழக்கம்அதிகரித்து வருகிறது.எனவே நெடுஞ்சாலையின் ஓரங்களில் கட்டட கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை