கருத்து கேட்பு கூட்டம்
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: அருப்புக்கோட்டை பாலையம்பட்டி குறுவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சியின் விரிவாக்கப்பகுதியை பிரித்து பாலையம்பட்டி கிழக்கு, பாலையம்பட்டி மேற்கு என புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக அந்த ஊராட்சி மக்களுடன் மார்ச் 11 மாலை 4:00 மணிக்கு பாலையம்பட்டி விஜய் மஹாலில் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை, கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம், என்றார்.