உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செண்டு பூ விளைச்சல் இருந்தும் விலை இல்லை

செண்டு பூ விளைச்சல் இருந்தும் விலை இல்லை

திருச்சுழி: திருச்சுழி அருகே பல கிராமங்களில் செண்டு பூ விவசாயம் அதிகமாக நடந்த நிலையில் பூ விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை இல்லாததால் பூச்செடிகளை கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.திருச்சுழி அருகே தமிழ்பாடி, குலசேகரநல்லூர், குருணை குளம், செம்பட்டி, புலியூரான் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப்பூ, முல்லை, கனகாம்பரம், செண்டு பூ விவசாயம் செய்யப்படுகிறது. பனி பொழிவு அதிகமாக இருப்பதால் மல்லிகை ,முல்லை பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. மஞ்சள் செண்டு பூ அதிக அளவில் விளைந்துள்ளது.ஆனால் விலை குறைவாக இருப்பதால் தோட்டத்திலிருந்து பூவை பறிக்க விவசாயிகள் தயங்குகின்றனர். ஓசூரில் இருந்து செண்டு பூ அருப்புக்கோட்டை பூ மார்க்கெட் அதிகமாக வருவதால் உள்ளூர் பூக்கள் விலை போவதில்லை. தற்போது 1 கிலோ செண்டு பூ 20 ரூபாயாக உள்ளது.தோட்டத்தில் உள்ள செடிகளில் இருந்து பூவை பறிக்க ஒரு ஆள் கூலி 200 ரூபாயாக உள்ளது. இதனால் விவசாயிகள் செண்டு பூக்களை செடியிலேயே அப்படியே விட்டு வைத்துள்ளனர். செடிகளை எடுத்து கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ