உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலையில் வெடி விபத்து கட்டடம் தரைமட்டம்; பெண் காயம்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து கட்டடம் தரைமட்டம்; பெண் காயம்

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ், 47. அதே பகுதியில் இவருடைய கட்டடத்தில் சந்தனமகாலிங்கம் என்பவர், பேன்சி ரக பட்டாசு தயாரிக்க தேவையான அட்டை குழாய்களுக்கு கோட்டிங் செய்யும் பணி செய்து வருகிறார். இங்கு வியாழக்கிழமை இரவில் வேலை நடைபெற்றுள்ளது. அப்போது தொழிலாளர்கள் அங்கிருந்த ஹீட்டர் மிஷினை அணைக்காமல் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் காலை, 8:15 மணியளவில் திடீரென கட்டடத்தின் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கட்டடம் வெடிக்கையில் கற்கள் பறந்து விழுந்ததில் பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி, 35, காயமடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்து நடந்த கட்டடத்தின் அருகே குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. கட்டடம் வெடித்தவுடன் சிதறாமல் அப்படியே தரைமட்டமானதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ