உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கே.ராமசாமி நினைவு நாள் கோவில்பட்டியில் அன்னதானம்

கே.ராமசாமி நினைவு நாள் கோவில்பட்டியில் அன்னதானம்

சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியின் நிறுவனர் கே.ராமசாமி 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.கோவில்பட்டி அரசு மருத்துவமனை செண்பகவல்லி அம்மன் கோயில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் ஆசிரமங்களில் காலை முதல் மாலை வரை 2500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கோவில்பட்டியில் உள்ள முக்கிய பூங்காக்களில் துப்புரவு பணிகளை செய்தனர்.கே.ஆர். கலை அறிவியல் கல்லுாரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நாலாட்டின்புத்துார் ரயில்வே பீடர் ரோடு பாண்டவர்மங்கலம் பகுதிகளில் நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.முன்னதாக கல்லுாரி நிர்வாகத்தினர் பேராசிரியர்கள் மாணவர்கள் கே. ராமசாமி உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ