உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகை திருடிய முன்னாள் போலீஸ்காரர் கைது

நகை திருடிய முன்னாள் போலீஸ்காரர் கைது

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் சில நாட்களுக்கு முன் நடந்த நகை திருட்டு சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.காரியாபட்டியில் பிப்., 4ல் எலக்ட்ரீசியன் சுப்புராஜ், மனைவி, மகன் வீட்டை பூட்டி வெளியில் சென்றனர். மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு, பீரோ திறந்திருந்தது. அதில் இருந்த 30 பவுன் நகை திருடப்பட்டது தெரிந்தது. காரியாபட்டி இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் தலைமையில் 3 தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வத்திராயிருப்பைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கணேசனை 39, சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கூட்டாளியான வ.புதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் கண்ணன் குமாரை நேற்று காரியாபட்டி போலீசார் கைது செய்தனர். 30 பவுன் நகையை இருவரும் பிரித்துக் கொண்டதை ஒப்புக்கொண்டனர்.அதில் ஏற்கனவே முன்னாள் ராணுவ வீரர் கணேசனிடமிருந்த 16 பவுன் நகை கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில், முன்னாள் ராணுவ வீரர் கணேசன் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு சிறையில் இருந்தவர் என்றும், முன்னாள் போலீஸ்காரர் கண்ணன் குமார் கொலை, திருட்டு வழக்கில் ஈடுபட்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை