மேலும் செய்திகள்
உரிமம் ரத்து செய்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு: 5 பேர் கைது
18 hour(s) ago
சர்க்கரை நோய் பாதித்தால் கால் பாதத்தில் கவனம் அவசியம்
18 hour(s) ago
திறந்தும் பயன்பாடில்லாத நகராட்சி சந்தை கட்டடம்
19 hour(s) ago
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் தனது நண்பர் தினேஷ் 26, தற்கொலை செய்து கொண்டதால் மன வேதனையடைந்த அவரது நண்பர் சந்தனம் 31, என்பவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வத்திராயிருப்பு முடுக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ், குடிப்பழக்கத்திற்கு ஆளாகி திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் வயிற்று வலி ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து மது குடித்து வந்தார். பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் நேற்று முன் தினம் மாலை 5:30 மணிக்கு தனது வீட்டில் தூக்கு போட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.அதே தெருவை சேர்ந்த தினேஷின் நண்பர் சந்தனம்,31, கூலித் தொழிலாளி. தினேஷ் தற்கொலை செய்த மன வருத்தத்தில் இருந்த அவர் அன்று இரவு 11:00 மணிக்கு வீட்டின் மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர். ஒரே தெருவை சேர்ந்த இருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 hour(s) ago
18 hour(s) ago
19 hour(s) ago