உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காதல் திருமணம் செய்த மகள், மருமகன் கடத்தல்

காதல் திருமணம் செய்த மகள், மருமகன் கடத்தல்

சாத்துார் : வெம்பக்கோட்டை தாயில்பட்டியில் காதல் திருமணம் செய்த மகள், மருமகனை காரில் கடத்திய தாய், தாய் மாமா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆலங்குளம் அடுத்தகொங்கன்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 19. தாயில்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 22. இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர். கடந்த மாதம் திருமணம் செய்து தாயில்பட்டியில் வசித்தனர். நேற்று முன்தினம் கிருஷ்ணவேணியின் தாத்தா பேர் நாயக்கன்பட்டி பாலகிருஷ்ணன், 65. உடல் நலம் சரியில்லை என்று கூறி அவரை பார்க்க வரும் படி கூறியுள்ளார். கிருஷ்ணவேணியும் , பழனிச்சாமியும் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் வைத்து பாலகிருஷ்ணனை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.அவர் தன்னை பேர் நாயக்கன்பட்டியில் இறக்கி விட்டு செல்லும் படி அவர்களிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் பாலகிருஷ்ணனை தாங்கள் வந்த காரில் ஏற்றி பேர் நாயக்கன்பட்டி வந்தனர்.பாலகிருஷ்ணனை பேர் நாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கி விட்டபோது அவர்கள் பின்னால் மற்றொரு காரில் வந்த கிருஷ்ணவேணியின் தாய் அய்யம்மாள், 48. தாய் மாமா ஜெயக்குமார், 52. மற்றும் உறவினர்கள் கோவில்பட்டி மணிகண்டன், 22 சிவன்சுடலையாண்ட்டி, 24. வேல்முருகன், 22. ஆகியோர் கிருஷ்ணவேணியையும் பழனிசாமியையும் தாக்கி காரில் கடத்திச் சென்றனர்.குருவிகுளம் செக் போஸ்டில் போலீசார் காரை மடக்கி பிடித்து வெம்பக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தாய் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ