உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அமைச்சர் ஆய்வுக்கூட்டம்

அமைச்சர் ஆய்வுக்கூட்டம்

விருதுநகர் : விருதுநகரில் சமூகநலத்துறை ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.சமூக நல ஆணையர் லில்லி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் மெர்சி ரம்யா, எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா பங்கேற்றனர்.சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சத்துணவு திட்டம், காலை உணவு திட்டம், சத்துணவு மையங்கள், மாவட்ட அளவில் செயல்படும் வழிகாட்டல், கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தின் செயல்பாடுகள், மகளிர் குறுகிய கால தங்கும் இல்லங்கள், பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.குழந்தை திருமணம் தடுப்பு குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !