மூளிபட்டியில் மரம் நடுவிழா
விருதுநகர்: மத்திய அரசின் சுற்றுச்சூழல், வன, பருவநிலை மாற்றம் துறை வழிகாட்டுதலின் படி உலகளாவிய மரம் நடுதல் திட்டத்தின் கீழ் செப் 2024க்குள் 80 கோடி மரக்கன்றுகளும், 2015 மார்ச்க்குள் 180 கோடி மரக்கன்றுகளும் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக விருதுநகர் பேங்க் ஆப் இந்தியா சார்பில் மூளிபட்டியில் ஒரு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா நடந்ததது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வங்கி மண்டல மேலாளர் கிஷோர்குமார், முதுநிலை மேலாளர் ராஜ்குமார் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. திட்ட இயக்குனர் தண்டபாணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விசாலாட்சி பங்கேற்றார்.