உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆட்டோக்களால் முடங்கியுள்ள முடங்கியாறு ரோடு --பள்ளிகள் திறக்கும் முன் தீர்வு காண எதிர்பார்ப்பு

ஆட்டோக்களால் முடங்கியுள்ள முடங்கியாறு ரோடு --பள்ளிகள் திறக்கும் முன் தீர்வு காண எதிர்பார்ப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே முடங்கியார் ரோடு ஆட்டோக்களால் சுருங்கி ஆக்கிரமிப்பிற்கு உள்ளாவதால் மக்கள் சிரமமடைந்த வருகின்றனர். பள்ளிகள் திறக்கும் முன் இதற்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ராஜபாளையம் நகர் பகுதி நடுவே காந்தி சிலை ரவுண்டானா தொடங்கி குமரன் தெரு எம்.ஜி.ஆர் சிலை வரை முடங்கியா ரோட்டில் ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக சாலையின் வெள்ளை கோடு மறைக்கும் வகையில் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.ஏற்கனவே நகரின் மேற்கு பகுதி குடியிருப்புகள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடந்தும் செல்லும் இடமாக இப்பகுதி இருந்து வருகிறது. இங்கு தனியார் சந்தை, உழவர் சந்தை, அரசு கால்நடை மருத்துவமனை அருகருகே அமைந்துள்ளது.இப்பகுதி மெயின் ரோட்டை ஆட்டோ ஸ்டாண்ட் ஆக சிலர் மாற்றி வைத்துள்ளனர். அலுவலக நேரங்களில் போட்டி போட்டுக் கொண்டு ரோட்டை ஆக்கிரமித்து நிற்பதால் டூவீலரில் செல்வோர், பாதசாரிகள், பொதுமக்களுக்கு தேவையற்ற இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. பொது போக்குவரத்திற்கு நிரந்தர தடையை ஏற்படுத்தும் நிலையை பள்ளி திறக்கும் முன்பே சரி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து சீனிவாசன்: இப் பகுதி ஆட்டோக்கள் நிறுத்துவதால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர். பள்ளி வாகனங்கள் இப்பகுதியை கடக்க இடையூறும் தாமதமும் ஏற்படுகிறது.முன்பு போக்குவரத்து போலீஸ் சார்பில் இதற்கு தீர்வு காணும் விதமாக ரோட்டோர ஓடையில் பலகை அமைத்து ஆட்டோக்களை இடைஞ்சலின்றி நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் மீண்டும் இது குறித்து போலீசார், நகராட்சி, வருவாய் துறை இணைந்து பரிசீலிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை