பாலையம்பட்டி புறநகர் பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கப்படாது
அருப்புக்கோட்டை : பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகள் அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்கப்பட மாட்டாது என, ரேஷன் கடை திறப்பு விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மக்களிடம் உறுதி அளித்தார்.அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி விரிவாக்க பகுதியில் எம்.எல்.ஏ., நிதியில் 10 லட்ச ரூபாய் செலவில் ரேஷன் கடை கட்டப்பட்டு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்த மக்கள் பாளையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது என மனு அளித்தனர்.மனுக்களை வாங்கிய பின் அமைச்சர் பேசியதாவது: விரிவாக்கப் பகுதிகளுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகள், ரேஷன் கடை, சுகாதார வளாகம் உள்ளிட்டவை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு வந்திருந்த மக்கள் அளித்த கோரிக்கையின்படி, பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளை நகராட்சியுடன் இணைக்கப்பட மாட்டாது. மேலும் பாலையம்பட்டிக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். என பேசினார்.அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.