உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் ஆமை வேகத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணி

சாத்துாரில் ஆமை வேகத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணி

சாத்துார் சாத்துாரில் ஆமை வேகத்தில் நடந்து வரும் பேவர் பிளாக் கல் பணியைவிரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை.சாத்துார் முக்கு ராந்தல் மெயின் ரோட்டில் இருபுறமும் மக்கள் நடந்து செல்வதற்காக பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரோட்டில் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு எம்சாண்ட் மணல் கொட்டப்பட்டது.பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு மேல் ஆன நிலையிலும் இன்று வரை முழுமையாக பணிகள் முடியவில்லை.மேலும் ஆமை வேகத்தில் நடந்து வரும் பணிகளால் மக்கள் நடந்து செல்லவும் வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். பேவர் ப்ளாக் கல் பதிப்பதற்காக சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள எம்.சாண்ட் மணல், தோண்டி அகற்றப்பட்ட மணலும் சாலை ஓரத்தில் அகற்றப்படாமல் உள்ளது.இதன் காரணமாக மெயின் ரோட்டில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கார் வேன் போன்ற வாகனங்களும் நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே விரைந்து பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியை முடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ