மேலும் செய்திகள்
நாளை மின்குறைதீர் முகாம்
03-Mar-2025
அலைபேசி பறித்த வழக்கில் 4 பேர் கைது ராஜபாளையம்: ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த கோயில் பூஜாரி மாடசாமி 32, ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் இரவு நேரம் வெளியூர் செல்ல நின்ற போது அலைபேசி தவறி விட்டதாகவும் லைட் அடிக்க கூறி இருட்டு பகுதிக்கு அழைத்துச் சென்ற நபர் டூவீலரில் வந்தவருடன் அலைபேசியை பறித்து தப்பினார். மற்றொரு சம்பவத்தில் சிவகிரி பெட்ரோல் பங்க் வேலை பார்க்கும் மணிகண்டன் 36, சிறுநீர் கழிக்க ஒதுங்கிய போது இருவர் அலைபேசி பறித்துக் கொண்டு தப்பினர். இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட கொல்லங்கொண்டானை சேர்ந்த இசக்கிமுத்து 28, கணேசன் 18, நக்கனேரி மணிகண்டன் 26, ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைச்சாமி 18, ஆகிய 4 பேரை தெற்கு போலீசார் கைது செய்துள்ளனர்.தவறி விழுந்து முதியவர் பலிசாத்துார்: சிவகாசி விசுவநத்தத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் 54. இவருக்கு சொந்தமான தோட்டம் சாத்துார் மேட்டமலையில் உள்ளது. இந்தத் தோட்டத்தை மேட்டமலையைச் சேர்ந்த செண்பகராஜ் 70. முதியவர் பராமரித்து வந்தார். நேற்று காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றவர். அங்குள்ள கிணற்றுக்கருகில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு வீரர்கள் அவர் உடலை மீட்டனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Mar-2025