உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குவாரி விதிமீறல்: கலெக்டர் ஆஜராக உத்தரவு

குவாரி விதிமீறல்: கலெக்டர் ஆஜராக உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டம் பனையடிபட்டி குவாரி விதிமீறல் வழக்கில் கலெக்டர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.வத்றாயிருப்பு அருகே மேலக்கோட்டையூர் கருப்பசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: வெம்பக்கோட்டை அருகே பனையடிபட்டியில் கிராவல் மற்றும் கருங்கற்கள் வெட்டி எடுக்க ஒருவருக்கு 2018 ல் அரசு உரிமம்வழங்கியது. சட்டத்திற்கு புறம்பாக மலையை குடைந்து கிரானைட் கற்களை எடுத்துள்ளனர். அனுமதித்த அளவைவிட அதிக கற்களை எடுத்துள்ளனர். அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்துள்ளனர். கனிம கழிவுகளால் விவசாய நிலம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர், கனிமவள உதவி இயக்குனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். குவாரிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: விருதுநகர் கலெக்டர் ஆக.,20ல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ