எஸ்.பி.ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 30- ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஆக. 14ல் நடப்பதை முன்னிட்டு விருதுநகர் எஸ்.பி. கவுதம் கோயல் நேற்று மாலை 4:00 மணிக்கு, 4 ரத வீதிகளிலும் நடந்து சென்று தேர் செல்லும் வழித்தடத்தை ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போலீசாருக்கு அறிவுறுத்தினார்.