உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் கடைகளை இடித்து புதிய கடைகள் கட்ட முடிவு

ஸ்ரீவி., பஸ் ஸ்டாண்ட் கடைகளை இடித்து புதிய கடைகள் கட்ட முடிவு

ஸ்ரீவில்லிபுத்துார் : - ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள கடைகளை இடித்து விட்டு புதிய கடைகளை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்துாரின் தற்போதைய பஸ் ஸ்டாண்ட் கடைகள் 1964ல் கட்டப்பட்டது. தற்போது பல்வேறு கடைகளில் கூரைகள் சிதைந்தும், பெயர்ந்தும், இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனையடுத்து முழு அளவில் கடைகளை இடித்து கட்ட நகராட்சி நிர்வாகம் முதலில் திட்டமிட்டு இருந்தது. ஆனால், மூன்றில் ஒரு பங்கு நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தற்போது அரசு மருத்துவமனை எதிர்புறம் கிழக்கு பகுதியில் உள்ள கடைகளை இடித்து கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கடந்த வாரம் மண் பரிசோதனை குழுவினர் ஆய்வு செய்து மண் மாதிரி எடுத்துச் சென்றுள்ளனர்.பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு டெண்டர் விடப்பட்டு, பின்னர் பழைய கடைகளை இடித்து விட்டு முதல் தளத்துடன் கூடிய புதிய கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்னும் நான்கு மாதத்திற்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது கட்டப்படும் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்த பின்பு தற்போதைய பஸ் ஸ்டாண்டில் கட்டுமான பணிகள் செய்தால்தான் பஜார் வீதியில் போக்குவரத்து நெருக்கடி இருக்காது என்பதும், பைபாஸ் ரோட்டில் உள்ள கான்வென்ட் பள்ளி காம்ப்ளக்சில் எந்த அளவுக்கு பார்க்கிங் வசதி உள்ளதோ, அதுபோல வசதியுடன் புதிய கடைகள் கட்டினால் தான் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கும், பஜார் வீதியில் நடந்து செல்வதற்கும் எவ்வித சிரமமும் இருக்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.புதிய கடைகள் கட்டி முடித்த பின்பு அதே இடத்தில் தற்போது உள்ளவர்களுக்கே கடைகளை வழங்க வேண்டும் என்பது தற்போதைய கடை உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை